Home உலகம் இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

561
0
SHARE
Ad

harryலண்டன், ஜூன். 3- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி (வயது 28), இவர் இங்கிலாந்து ராணுவத்தின் விமான படையில் பணிபுரிகிறார்.

இவரை கொலை செய்து விடுவேன் என ஒரு வாலிபர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அவரது பெயர் அஷ்ரப் இஸ்லாம் ( வயது 30).

மிகவும் பரபரப்பான லண்டனில் உள்ள போலீஸ் நிலையம் சென்ற இவர் தனக்கு குடியிருக்க வீடு இல்லை என புகார் செய்தார். அதற்காக இளவரசர் ஹாரியை கொலை செய்வேன் என்றும் மிரட்டினார். உடனே, அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

இவர் மீது அஸ்பிரிட்ஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை தொடர்ந்து தண்டனைக்காக இவர் காத்திருக்கிறார். குற்றவாளி அஷ்ரப் இஸ்லாம் மார்க் டவுன்லி பகுதியை சேர்ந்தவர். கொலை மிரட்டல் விடுத்த இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.