Home வாழ் நலம் உதடு அழகை பராமரிக்க

உதடு அழகை பராமரிக்க

720
0
SHARE
Ad

lipsகோலாலம்பூர், ஜூன் 5- பெண்களில் அழகை எடுத்துக்காட்டுவதில் கண்களுக்கு அடுத்தபடியாக இருப்பது உதடு.

இத்தகைய உதடு கருத்து பொலிவிழந்து காணப்பட்டால் முகத்தின் வசிகரம் கெட்டு விடும். சில பெண்கள் எப்பொழுது பார்த்தாலும் உதட்டை கடித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்படி செய்வதால் முதட்டின் மென்மை போய் விடும். மேலும் சில இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். பின் படிப்படியாக உதடுகள் கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு மிக முக்கிய காரணம் உடலில் அதிக உஷ்ணம் இருப்பதுதான்.

#TamilSchoolmychoice

இந்த உஷ்ணத்தை போக்க வெந்தயத்தை ஒரு கரண்டி  இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்துவிடவேண்டும்.

இரவில் படுக்க போகும் போது வெண்ணையை உதட்டில் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு மீண்டும் பழைய பொலிவுக்கு வந்து விடும்.

வாரம் ஒரு நாள் உதட்டிற்கு வெண்ணை தடவி வந்தால் உதடு மென்மையாகி பார்கக கவர்ச்சியாக தெரிய ஆரம்பிக்கும்.

உதடு சிவப்பாக மாற வேண்டும் இன்றைய இளம் பெண்கள் பல விதமான கிரீம்களை போட்டு உதட்டில் அழகை கெடுத்து விடுகின்றனர்.

உதடு சிவப்பழகு பெற இயற்கையாக வைத்தியமான கொத்தமல்லியை அரைத்து அந்த சாறை உதட்டில் தொடர்ந்து பூசி வந்தால் படிப்படியாக உதடு சிவப்பழகாவதை பார்க்கலாம்.