Home நாடு வேதமூர்த்தி இன்று துணை அமைச்சராகப் பதவியேற்பு!

வேதமூர்த்தி இன்று துணை அமைச்சராகப் பதவியேற்பு!

564
0
SHARE
Ad

waythaகோலாலம்பூர், ஜூன் 5 – ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று செனட்டராகவும், பிரதமர் துறையின் துணையமைச்சராகவும் பதவி ஏற்கவுள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற இல்லத்தில் செனட்டர் பதவியையும், மாலை 4.30 மணிக்கு இஸ்தானா நெகாராவில் துணை அமைச்சராகவும் அவர் பதவி ஏற்றுக்கொள்வார்.

கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடந்த 13 ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் புதிய அமைச்சரவையில் துணையமைச்சராக வேதமூர்த்தி நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

ஆனால் அமைச்சரவைப் பதவியேற்பின் போது வேதமூர்த்தி வெளிநாட்டில் இருந்ததால் அவரால் அப்போது பதவிப்பிரமாணம் எடுக்க இயலவில்லை. எனவே இன்று நடைபெறவுள்ள பதவிப்பிரமாணத்தில் வேதமூர்த்தி துணையமைச்சராகப் பதவி ஏற்பார்.