Home உலகம் 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் தீர்மானம்?

13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் தீர்மானம்?

551
0
SHARE
Ad

rajapaseஜூன் 5- 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் நேற்றிரவு சந்தித்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இதன்படி, அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான யோசனைத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

#TamilSchoolmychoice

விசேட அமைச்சரவை யோசனைத் திட்டமாக சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து மாகாணசபைகளினதும் அனுமதியுடன் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்ற சரத்தை நீக்கி அதற்கு பதிலாக பெரும்பான்மையான மாகாணசபைகளினதும் அனுமதியுடன் திருத்தங்களைச் செய்ய முடியும் என்ற திருத்தம் செய்யப்படவுள்ளது,

இரண்டு மாகாணசபைகளை ஒன்றிணைக்க முடியும் என்ற சரத்து முழுமையாக நீக்கப்படவுள்ளது. இந்த இரண்டு திருத்தங்களே முதலில் மேற்கொள்ளப்படவுள்ளது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலும் கட்சித் தலைவர்கள் நீண்ட விவாதம் நடத்தியுள்ளனர்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைத்து அதன் ஊடாக தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் பங்கேற்காவிட்டால் என்ன செய்வது என கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்னளர்.

குறித்த கட்சிகள் பங்கேற்காவிட்டாலும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகள் தொடரும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.