Home நாடு செனட்டர் வி.சுப்ரமணியத்திற்கு மாமன்னரின் ‘டத்தோ’ விருது

செனட்டர் வி.சுப்ரமணியத்திற்கு மாமன்னரின் ‘டத்தோ’ விருது

592
0
SHARE
Ad

Senator-Subramaniam-Sliderஜூன் 7 – மாட்சிமை தங்கிய மாமன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு ம.இ.கா பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதியின் தலைவரான செனட்டர் வி. சுப்ரமணியத்திற்கு டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பாராட் மணியம் என நட்பு வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் அழைக்கப்படும் வி.சுப்ரமணியம் கடந்த வருடம் செனட்டராக நியமிக்கப்பட்டார்.

பல ஆண்டுகளாக ம.இ.கா அரசியலில் ஈடுபாடு காட்டி வரும் வி.சுப்ரமணியம், நீண்ட காலமாக ம.இ.கா பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதியின் தலைவராக சேவையாற்றி வருகின்றார்.

விளையாட்டுத் துறையிலும் ஈடுபாடு கொண்ட சுப்ரமணியம் சிலாங்கூர் பூப்பந்து சங்கத்தின் தலைவருமாவார்.

தேசிய பூப்பந்து சங்கத்தின் தேசிய உதவித் தலைவராகவும் சுப்ரமணியம் பொறுப்பு வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.