Home அரசியல் உதயகுமார் விடுதலை செய்யப்படவேண்டும் – வேதமூர்த்தி கூறுகிறார்

உதயகுமார் விடுதலை செய்யப்படவேண்டும் – வேதமூர்த்தி கூறுகிறார்

540
0
SHARE
Ad

waythaகோலாலம்பூர், ஜூன் 7 – தேச நிந்தனை குற்றத்திற்காக ஹிண்ட்ராப் நிறுவனர் பி.உதயகுமாருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து அவரது சகோதரரும் பிரதமர் துறையின் துணை அமைச்சருமான பி.வேதமூர்த்தி தனது கவலையையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

மேலும் உதயகுமார் விடுதலையாவதற்கு இன்னும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது என்றும், உடனடியாக தனது அண்ணனை மேல் முறையீடு செய்யும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதோடு பிரிட்ஷ் அரசாங்கத்தை விமர்சித்து கடுமையான வார்த்தைகளால் தனது அண்ணன் கடிதம் எழுதியபோதும், அக்குற்றம் தேச நிந்தனை குற்றச்சாட்டுக்கு ஒப்பாகாது என்றும் வழக்கறிஞரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிண்ட்ராப் இயக்கத்தின் சட்ட ஆலோகராக இருந்த உதயகுமார், பிரிட்டிஷ் அரசாங்கத்தை விமர்சித்து அக்கடிதத்தை எழுதும் சமயம், இரண்டாவது முறையாக பாடாங் ஜெயாவிலுள்ள இந்து ஆலயம் சிலாங்கூர் அரசாங்கத்தால் இடிக்கப்பட்டிருந்து. இதனால் தேசிய முன்னணியின் தலைமையிலான சிலாங்கூர் அரசாங்கத்தின் மீது கோபத்தில் இருந்த உதயகுமார் அவ்வாறு கடுமையான வார்த்தைகளால் கடிதம் எழுதினார்” என்று வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

உதயகுமார் தனித்துவமும் திறமையும் மிக்கவர்

“உதயகுமார் மிகவும் தனித்துவமும், திறமையும் மிக்கவர். அவரது திறமைகள் அனைத்தும் சிறைக்குள் முடங்கிவிடக்கூடாது. அவரது கட்சியை வழநடத்திச் செல்ல அவரை விடத் தகுதியானவர் வேறு யாரும் கிடையாது. எனவே அவரது போராட்டங்கள் வெளியே இருக்க வேண்டுமே தவிர தடுக்கப்பட்ட சுவற்றுக்குள் அல்ல” என்று வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“போராடுவதில் எங்களின் பாணி வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் நாங்கள் இருவரும் ஒரே பிரச்சனைக்காகத் தான் போராடுகிறோம். எனவே உதயகுமார் விடுதலை செய்யப்பட்டு மனித உரிமைக்காக தொடர்ந்து அவர் போராடுவதையே நான் விரும்புகிறேன்” என்று வேதமூர்த்தி வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.