Home கலை உலகம் பாம்புடன் விளையாடிய நயன்தாரா

பாம்புடன் விளையாடிய நயன்தாரா

640
0
SHARE
Ad

Nayanthara plays with a snake Stillsசென்னை, ஜூன் 7 – சினிமாவில் அதிரடி சண்டைக்காட்சிகளில் நடிக்கும் நடிகைகள்கூட, நிஜத்தில் பல்லியை கண்டால் அலறிக்கொண்டு ஓடுவார்கள். ஆனால் நயன்தாராவோ, படப்பிடிப்பில் ஒரு பாம்புடன் தைரியமாக விளையாடியிருக்கிறார்.

ஆனால் இந்த செய்தி தமிழக சினிமா வட்டாரங்களில் பரவியபோது யாரும் அதை நம்பவில்லை. பாம்பைக் கண்டால் படையே நடுங்கும், நயன்தாரா போய் பாம்பை கையில் பிடித்தாரா? விளம்பரத்திற்காக வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்று அனைவரும் கூறினார்கள்.

இது குறித்து நயந்தாரா தற்போது நடித்து வரும் கதிர்வேலின் காதல் படக்குழுவினர் கூறுகையில், நயன்தாரா பாம்பை கையில் பிடித்து விளையாடியது உண்மைதான். படத்தில் நடிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பல் இல்லாத குட்டி பாம்புதான் அது. ஆனால் அதை நயன்தாரா தைரியமாக கையில் எடுத்து வைத்து விளையாடினார்.

#TamilSchoolmychoice

அதோடு, அந்த பாம்புடன் பல கோணங்களில் போட்டோக்களும் எடுத்துக்கொண்டார். அப்போது அவரது முகத்தில் கடுகளவும் பய உணர்வு இல்லை. மாறாக, அந்த பாம்பு கையில் நெளிந்து சென்றது குழந்தையாக ரசித்தபடி மகிழ்ந்தார் நயன்தாரா என்கிறார்கள்.