Home நாடு மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவராக டத்தோ வி.சுப்பிரமணியம் தேர்வு

மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவராக டத்தோ வி.சுப்பிரமணியம் தேர்வு

941
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) நடைபெற்ற மலேசிய பூப்பந்து (பேட்மிண்டன்) சங்கத்தின் 76-வது ஆண்டுக் கூட்டத்தில் எதிர்வரும் 2021-2025 தவணைக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சங்கத்தின் தலைவராக டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ முகமட் நோர்சா சக்காரியா தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டு துணைத் தலைவர்களாக டத்தோ வி.சுப்பிரமணியமும், டத்தோஸ்ரீ ஜஹாபர்டீன் முகமட் யூனுசும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

வி.சுப்பிரமணியம் சிலாங்கூர் மாநில பூப்பந்து சங்கத்தின் தலைவரும் முன்னாள் செனட்டருமாவார்.

ஜஹாபர்டீன் கோலாலம்பூர் பூப்பந்து சங்கத்தின் தலைவராவார்.

தேசிய பூப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராக டத்தோ கென்னி கோ சீ கியோங், பொருளாளராக டத்தோ மைக்கல் தாங் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களுக்கு இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரிசால் மெரிக்கான் நைனா மெரிக்கான் தனது நல்வாழ்த்துகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.