Home 13வது பொதுத் தேர்தல் பக்காத்தானின் ‘கறுப்பு 505’ பேரணி ஜுன் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

பக்காத்தானின் ‘கறுப்பு 505’ பேரணி ஜுன் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

517
0
SHARE
Ad

Rafizi-Ramli-Sliderகோலாலம்பூர், ஜூன் 10 – வரும் ஜூன் 15 ஆம் தேதி, கோலாலம்பூர் பாடாங் மெர்போக்கில் நடக்க விருந்த பக்காத்தானின் கறுப்பு 505 பேரணி, அவ்விடத்தில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சில நிகழ்வுகளின் காரணமாக ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

மேலும் பாடாங் மெர்போக்கில் பேரணி திட்டமிடப்பட்டிருந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதியன்று, மறுசுழற்சி விழா மற்றும் ஒரு திருமண விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் தங்களைத் தொடர்பு கொண்டு பேரணித் தேதியை மாற்றிமைக்கக் கோரியதாகவும் ரபிஸி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உள்துறை அமைச்சர் அகமட் சாகிட், தேர்தல் விதிமுறைகளை மீறி 200,000 ரிங்கிட்டுக்கு மேல் செலவு செய்துள்ளது உட்பட தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பக்காத்தான் இதுவரை 34 மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக ரபிஸி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice