Home இந்தியா அத்வானி ராஜினாமாவால் 4 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு

அத்வானி ராஜினாமாவால் 4 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு

603
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூன். 11- டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரசும், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வும் ஆட்சியில் உள்ளன.

05TH-CITY-ADVANI_263336eகாங்கிரஸ் கட்சி மீதான அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருக்கிறது.

எனவே டெல்லி சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கருத்துகணிப்புகளில் தெரியவந்தது. இது பா.ஜ.க.வுக்கு வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்திலும் இதே நிலை நீடிக்கிறது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் கட்சிப் பதவிகளில் இருந்து அத்வானி விலகி இருப்பது பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அத்வானிக்கு விசுவாசமாக இருக்கும் பா.ஜ.க. தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது 4 மாநில தேர்தலின்போது பிரசார பணிகளில் தொய்வை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதனால் 4 மாநில தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்ற பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.