Home நாடு நாடாளுமன்றத்தில் ‘ஐபிசிஎம்சி’ மனு தாக்கல் செய்யப்படும் – குலசேகரன்

நாடாளுமன்றத்தில் ‘ஐபிசிஎம்சி’ மனு தாக்கல் செய்யப்படும் – குலசேகரன்

518
0
SHARE
Ad

kulaஈப்போ, ஜூன் 12 –  காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையத்தை (ஐபிசிஎம்சி) அமைப்பது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது.

இருப்பினும் புதிதாக பிரதமர் துறையில் அமைச்சர் பதவி ஏற்றுள்ள பால் லோ போன்றவர்கள் அதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.

“காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழலையும் விசாரிக்க சார்பற்ற ஆணையமான  ‘ஐபிசிஎம்சி’ யை அமைக்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதி மற்றும் முன்னாள் தலைமை காவல்துறை அதிகாரி தலைமையிலான அரச விசாரணை ஆணையம் பரிந்துரைத்தது.

#TamilSchoolmychoice

அதன் படி அப்போது பிரதமராக இருந்த அப்துல் படாவியின் ஆட்சியில், இந்த ஆணையத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

ஆனால் இந்த ஆணையத்தை அமைப்பதற்கு எழுந்த பல்வேறு எதிர்ப்புகளும், அதிருப்திகளும் காரணமாக ஐபிசிஎம்சி அப்போது கைவிடப்பட்டது” என்று குலசேகரன் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டவர் தடுப்புக்காவலில் மரணம்

“அதிகரித்து வரும் தடுப்புக்காவல் மரணங்கள் யாவும் மலேசிய நீதித்துறையில் உள்ள ஆழமான கறைகளை பிரதிபலிக்கிறது. அதோடு தற்போது காவல்துறையில் அதிகரித்துள்ள இந்த எல்லைமீறும் நடவடிக்கைகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஜப்பான் நாட்டவரின் உயிரைப் பறித்துள்ளது.”

“அதற்காக ஜப்பான் நாட்டு கைதிகளின் உயிர், மலேசிய நாட்டினரின் உயிரை விட விலை உயர்ந்தது என்று கூறவில்லை. தடுப்புக்காவலில் நடந்து வரும் தொடர் மரணங்களுக்கு எந்த நாட்டைச் சேர்ந்தவரானாலும், பொருளாதாரத்தில் உயர்ந்தவரானாலும், படித்து பட்டம் பெற்றவரானாலும் விதிவிலக்கல்ல என்பதை  காவல்துறையின் அக்கறையின்மை காட்டுகிறது”

“ஐபிசிஎம்சி எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுகிறோம். நாடாளுமன்றத்தில்  ‘ஐபிசிஎம்சி’ யை அமைக்கக் கோரி பக்காத்தான் மனு தாக்கல் செய்யத் தான் போகிறது. அப்போது யார் இந்த சமூகத்தின் மீது அலட்சியம் காட்டுகிறார்கள், யார் இந்த தேசத்தின் நிலை கண்டு வெட்கப்பட வேண்டியவர்கள் என்று மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள்” என்று குலசேகரன் தெரிவித்துள்ளார்.