Home வாழ் நலம் உடலை குளிர்ச்சியாக்கும் கற்றாழை!

உடலை குளிர்ச்சியாக்கும் கற்றாழை!

581
0
SHARE
Ad

ht2007ஜூன் 13 – கற்றாழையை பொதுவாக அழுத்த நிவாரணி என்று அழைக்கிறோம். இது உடலை தேவைக் கேற்றபடி மாற்றியமைக்கிறது. இவை இயற்கையிலே பல்வேறு  சத்துக்களைக் கொண்டுள்ளது. இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அடங்கியுள்ள கற்றாழை, உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் கற்றாழையை சாறு செய்தும் குடிக்கலாம்.

கற்றாழைச் சாறு போதையை நீக்க உதவுகிறது. கற்றாழையை கழுவி அதன் தோல் நீக்கி குழம்பு வைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் போகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு கற்றாழை இலையின் சாறு பயன்படுகிறது அதோடு வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகளையும் வெளியேற்றுகிறது.

மேலும் கற்றாழை முக அழகு சாதனங்கள் தயாரிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. கற்றாழையின் ஜெல் போன்ற பகுதியை பதப்படுத்தி குளிர்பானமானமும் தயாரிக்கப்படுகிறது. கற்றாழையின் வேறை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து, 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நொய்கள் தீரும்.ஆண்மை நீடிக்கும்.