Home வணிகம்/தொழில் நுட்பம் கோகா கோலா, ஆப்பிள், சாம்சுங், கூகுள் – ஆசியாவின் பிரசித்தி பெற்ற வணிக முத்திரைகளாக தேர்வு

கோகா கோலா, ஆப்பிள், சாம்சுங், கூகுள் – ஆசியாவின் பிரசித்தி பெற்ற வணிக முத்திரைகளாக தேர்வு

601
0
SHARE
Ad

Coca-Cola-logoஜூன் 13 – விற்பனை செய்யப்படும் பொருளின் வணிக முத்திரையை (ஆங்கிலத்தில் பிராண்ட் – brand) வைத்துத்தான் இப்போதெல்லாம் அந்த பொருளின் விலையும், மதிப்பும், தரமும் நிர்ணயிக்கப்படுகின்றன.

#TamilSchoolmychoice

அந்த வகையில் நிக்கெய் பிபி கொன்சல்டிங் நிறுவனம் ஆசியாவின் 12 வட்டாரங்களில் உலகளாவிய அளவில் புகழ்பெற்ற 60 வணிக முத்திரைப் பொருட்களை ஆய்வு செய்ததில் கோகா கோலா, ஆப்பிள், சாம்சுங் மற்றும் கூகுள் ஆகிய வணிக முத்திரைகள் அதிக புள்ளிகள் பெற்று முதல் நிலைகளைப் பெற்றுள்ளன.

கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான பிராண்ட் ஆசியா எனப்படும் ஆய்வை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் ஜப்பானின் அதிக இடங்களில் கோகா கோலா பிரபலமாக இருக்கின்றது.

பிலிப்பைன்சின் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் கோகா கோலா, இந்தியாவிலும், தென் கொரியாவிலும் நான்காவது இடத்தையும், தாய்லாந்தில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சிங்கப்பூரில் முதன்மை இடத்தையும் தைவான், தென் கொரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் முதல் பத்து இடங்களுக்குள்ளும் இடம் பிடித்துள்ளது.

சாம்சுங், அதன் தாயகமான தென் கொரியாவில் முதல் இடத்தையும், சிங்கப்பூரில் மூன்றாவது இடத்தையும், மியன்மார், வியட்னாம், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க உறுதியான நிலையையும் பிடித்திருக்கின்றது.

கூகுள் வணிக முத்திரை தைவானில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதோடு, சிங்கப்பூர், வியட்னாம், மலேசியா ஆகிய நாடுகளில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருக்கின்றது.