Home இந்தியா பீகாரில் ஓடும் ரயிலில் 100 மாவோ.க்கள் துப்பாக்கி சூடு!

பீகாரில் ஓடும் ரயிலில் 100 மாவோ.க்கள் துப்பாக்கி சூடு!

578
0
SHARE
Ad

Bihar-India-locationபாட்னா, ஜூன் 13 – பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் மீது மாவோயிஸ்டுகள் 100 பேர் திரண்டு வந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

#TamilSchoolmychoice

சம்பவம் நடந்தஇடத்திற்கு துணை ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பெண் நக்சல்களும் இடம்பெற்றிருந்தனர். ரயில் டிரைவர் மற்றும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர்ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.

சிலமாதங்கள் தணிந்து இருந்த மாவோநக்சல்கள் அட்டகாசம் மீண்டும் பீகார் மாநிலத்தில் தலைதூக்கியுள்ளது. மாவோ., நக்சல்கள் பரவிக்கிடக்கும் ஜார்கண்ட், சட்டீஸ்கர் , ஒடிசா, மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு பல்வேறுநடவடிக்கை எடுத்து வந்தாலும் அவர்களை அறவே ஒழிக்க முடியவில்லை.

கடந்தஆண்டில் ரோந்து சென்ற பாதுகாப்பு வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரில் கடந்த மே மாதம் 25 ம்தேதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த போதுமாவோ.,க்கள் நடத்திய தாக்குதலில் காங்., கட்சியின் மூத்த தலைவர் வி.சி., சுக்லா மற்றும் காங்., மூத்த நிர்வாகிகள் என 27 பேர் கொல்லப்பட்டனர்.

ஓடும் ரயிலை நோக்கி துப்பாக்கி சூடு

இந்நிலையில் இன்று பீகார் மாநிலம் ஜமுயி மாவட்டத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது மாவோ.,க்கள் துப்பாக்கியால் சரமாரியாகசுட்டனர். இந்த ரயில் பாட்னாவில் இருந்து தன்பத் சென்று கொண்டிருந்த போதுஇந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தாமல் வேகமாகசென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஒரு பயணியும், பாதுகாப்புபடை வீரர் ஒருவரும் பலியாகி உள்ளதாகவும், 20 பேர் வரை காயமுற்றுள்ளதாகமுதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு 2 பிரிவுகளைச் சேர்ந்த துணை ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பயணிகளிடம் கொள்ளை

இந்தரயிலில் பாதுகாப்பு படையினர் பலர் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால்இவர்களை சுட்டு கொல்லும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூடுநடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் குந்தார் பகுதியில் ரயில்நிறுத்தப்பட்டது. அங்கு வந்த நக்சல்கள் பலர் பயணிகளிடம் இருந்த உடமைகளைகொள்ளை அடித்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சுமார் 60 முதல் 80 பேர் வரை நக்சல்கள் வந்திருந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.