கோலாலம்பூர், ஜூன் 17 – தடுப்புக் காவலில் இறந்த தர்மேந்திரன் குடும்பத்தினரை நேற்று அவர்களது இல்லத்தில் சந்தித்த சிலாங்கூர் மந்திரி பெசாரான டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம், கணிசமான நிதியுதவி வழங்கியதோடு, குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த காலிட் இப்ராஹிம்,“தர்மேந்திரன் மரணத்தில் உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதோடு குடும்பத்தலைவரை இழந்து தவிக்கும் அக்குடும்பத்திற்கு நிரந்தர வருமானம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்கு மாநில அரசு வழங்கக் கூடிய நிதி உதவிகள் பற்றி பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மந்திரி பெசாருடன் கெஅடிலான் மனித உரிமை, சட்டப்பிரிவு துணைத்தலைவர் ஜெயதாசும் உடன் இருந்தார்.
கோலாலம்பூர் தலைமையகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரன் கடந்த மே 21 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். அவரது இறப்பிற்குப் பிறகு நிரந்தர வருமானம் இன்றி தர்மேந்திரனின் மனைவி மேரியும், அவரது 2 வயது மகனும் தவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RUBs-cFy1wI