Home இந்தியா பா.ஜ.க.வுடன் ‘விவாகரத்து’ – நிதிஷ் குமார் பதவி தப்புமா? : 19ம் தேதி பலப்பரீட்சை

பா.ஜ.க.வுடன் ‘விவாகரத்து’ – நிதிஷ் குமார் பதவி தப்புமா? : 19ம் தேதி பலப்பரீட்சை

557
0
SHARE
Ad

பாட்னா, ஜூன் 17- பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பாராளுமன்ற தேர்தலில் முன்னிலைப் படுத்துவதற்கு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்தது.

nitish_350_020813093548இதுதொடர்பாக அத்வானி உள்பட பா.ஜனதா தலைவர்கள் சந்தித்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பயன்கிடைக்கவில்லை.

இதனால் பா.ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைவது உறுதியானது. இந்நிலையில் இன்று பீகார் மாநில மந்திரிசபை நிதிஷ்குமார் தலைமையில் கூடியது. இதை பா.ஜனதா மந்திரிகள் புறக்கணித்தனர். அவர்கள் சுஷில் குமார் மோடி தலைமையில் தனியாக கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

#TamilSchoolmychoice

பீகாரின் மந்திரிசபை கூட்டம் முடிந்த பின் நிதிஷ் குமார், மாநில கவர்னர் படேலை சந்தித்து பா.ஜனதா உடனான உறவை முறித்துக்கொள்வதாக கடிதம் கொடுத்தார். அத்துடன் தனக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. பட்டியலையும் கொடுத்தார். இதனால் 17 வருட ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜனதா கூட்டணி உடைந்தது.

சுமார் 1 1/2 மணி நேரம் கவர்னருடன் தனியாக பேசிக் கொண்டிருந்த நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சட்டசபையில் எங்களுக்கு இருக்கும் பலத்தை நிரூபிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் சட்டசபை சிறப்பு கூட்டத்தை வரும் 19ம் தேதி (புதன்கிழமை) கூட்ட வேண்டும் என கவர்னரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

கவர்னரும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். சட்டசபையில் எங்கள் பலத்தை நிரூபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 116 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.விற்கு 91 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 6 சுயேட்சைகளின் ஆதரவுடன் நிதிஷ் குமார் பலப்பரீட்சையில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.