Home இந்தியா தீமைகளை எதிர்த்து கடுமையாக போராடி தனித்தன்மையுடன் விளங்க வேண்டும்: அப்துல் கலாம் அறிவுரை

தீமைகளை எதிர்த்து கடுமையாக போராடி தனித்தன்மையுடன் விளங்க வேண்டும்: அப்துல் கலாம் அறிவுரை

590
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூன் 19- டெல்லியில் உள்ள தேசிய பால பவனில் நடைபெற்ற சிறுவர் – சிறுமியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:-

abdul-kalamஒவ்வொரு குழந்தையிடமும் சிறப்பு வாய்ந்த தனித்தன்மைகள் உள்ளன. உங்களது நோக்கம் நிறைவேறுவதற்கான முதல்படியாக நல்ல வழிகாட்டியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

சிறிய குறிக்கோள்களை கைவிட்டு பெரிய நோக்கங்களை உங்கள் இதயங்களில் பதிய வைத்துக்கொண்டு அறிவை வளர்க்க வேண்டும்.

#TamilSchoolmychoice

படைப்பாற்றல், நேர்மை, வீரம் ஆகியவற்றைக் கொண்டு அறிவையும் அனுபவத்தையும் பெற நீங்கள் முயல வேண்டும்.

இந்த நோக்கத்திற்காக எல்லா தீமைகளையும் எதிர்த்து கடுமையாக போராடி உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

‘2020’ என்னும் உங்கள் நோக்கம் எப்படி உள்ளது என்று நிருபர்கள் கேட்டபோது, ‘2020க்கு இன்னும் 7 ஆண்டுகள் உள்ளன.

நமது பொருளாதாரம் 7-8 சதவீத வளர்ச்சியுடன் சீராக உயர்ந்தால் அந்த இலக்கை நாம் அடைந்து விடலாம்’ என்று பதிலளித்தார்.