Home அரசியல் அமைச்சர்கள் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் – குலசேகரன்

அமைச்சர்கள் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் – குலசேகரன்

578
0
SHARE
Ad

Kula-DAP-Sliderபுத்ரா ஜெயா, ஜூன் 19 – செனட்டர் பதவி ஏற்பதற்கு முன்னரே பிரதமர் துறையில் நியமனம் செய்யப்பட்ட 2 அமைச்சர்கள் மற்றும் 3 துணையமைச்சர்களின் பதவி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் இன்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் தாக்கல் செய்த இம்மனுவில், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் வாஹிட் ஓமார், பால் லோ செங் குவான் மற்றும் துணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள வேதமூர்த்தி பொன்னுசாமி, டாக்டர் லோக பால மோகன் ஜகநாதன் மற்றும் அகமட் பாஷா முகமட் ஹனிபா ஆகியோரின் பெயர்களை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் துறையைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் மற்றும் மூன்று துணையமைச்சர்களின் பதவி நியமனம், மலேசிய அரசியலமைப்புச் சட்டம் 43, 43A ஆகிய பிரிவுகளின் கீழ் சட்டத்திற்குப் புறம்பானவை. எனவே அவர்களின் பதவி நியமனங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தான் மனு தாக்கல் செய்திருப்பதாக பின்னர் செய்தியாளார்களிடம் குலசேகரன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் இந்த 5 பேரும் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி தான் செனட்டராகப் பதவி ஏற்றனர் என்றும், ஆனால் கடந்த மே மாதம் 15 ஆம் தேதியே பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களை அமைச்சர் மற்றும் துணையமைச்சர்களாக அறிவித்துவிட்டார் என்றும் குலசேகரன் குற்றம் சாட்டினார்.

அதோடு இந்த 5 பேரும் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் போட்டியிடாமலேயே அமைச்சரவையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.