Home கலை உலகம் ரஜினி நடிப்பில் சந்திரமுகி இரண்டாம் பாகம்?

ரஜினி நடிப்பில் சந்திரமுகி இரண்டாம் பாகம்?

761
0
SHARE
Ad

rajinikanth-1_350_010713025232_040213122336சென்னை, ஜூன் 20 – மலையாளத்தில் மோகன்லால் – சுரேஷ்கோபி, ஷோபனா நடித்த படம் மணிசித்திரதாழ். இப்படத்தை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் மறுபதிப்பு செய்தார் பி.வாசு. அதையடுத்து தமிழிலும் சந்திரமுகி என்ற பெயரில் மீண்டும் மறுபதிப்பு செய்தார். மலையாளம், கன்னடத்தை விட தமிழில் அப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. முக்கியமாக, சந்திரமுகியாக கண்களை உருட்டி, ரசிகர்களை மிரட்டும் பேயாக நடித்த ஜோதிகா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், முதன்முதலில் மலையாளத்தில் வெளியான மணிசித்திரதாழ் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அப்படத்திலும் மோகன்லால்- ஷோபனா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். அப்படத்துக்கு கீதாஞ்சலி என பெயரும் வைத்து விட்டார்களாம்.

அதனால், தமிழிலும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று சிலர் ரஜினி தரப்பை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். வருடக்கணக்கில் கோச்சடையான் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், அதற்கு முன்னதாக, ஒரு படத்தை கொடுக்க ஏற்கனவே யோசித்துக்கொண்டிருக்கும் ரஜினி, சந்திரமுகி இரண்டாம் பாகத்திற்கு ஒத்துக்கொள்வார் என்றே நம்பப்படுகிறது.