Home கலை உலகம் ஹேமமாலினியின் இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம்

ஹேமமாலினியின் இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம்

543
0
SHARE
Ad

ஜூன் 24- பாலிவுட் நட்சத்திர தம்பதியான தர்மேந்திரா- ஹேமமாலினியின் இளைய மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

hema maliniஷோலே உட்பட பல இந்தி திரைப்படங்களில் இணைந்து நடித்த தர்மேந்திராவும், ஹேமமாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் மூத்த மகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான இஷா தியோலுக்கு(வயது 31), பரத் தகாடனி என்ற தொழில் அதிபருடன் கடந்தாண்டு திருமணம் நடந்தது.

#TamilSchoolmychoice

இவரது இளைய மகள் அகானா தியோல்(வயது 27) திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஒரு சில திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.

ஒடிசி நடனத்தில் திறமை பெற்ற அகானா, பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நடனங்களிலும் தேர்ச்சி பெற்றவர்.

இந்நிலையில் அகானாவுக்கும், டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் வைபவ் வோராவுக்கும், நேற்று முன்தினம் இரவு மும்பையில் ஜூஹூ பகுதியில் உள்ள ஹேமமாலினியின் இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதில் பாலிவுட் திரையுலக பிரபலங்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் பங்கேற்றனர். ஆனாலும் திருமண திகதி பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.