Home உலகம் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் நிலை மோசமடைகிறது

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் நிலை மோசமடைகிறது

520
0
SHARE
Ad

ஜொஹன்னெஸ்பர்க், ஜூன் 24- தென் ஆப்பிரிக்க இனவெறிக்கு எதிராக போராடியவரும், முதல் கருப்பின அதிபருமான நெல்சன் மண்டேலாவிற்கு வயது 94.

நுரையீரல் தொற்று காரணமாக அவதியுற்று வரும் அவர் கடந்த 8-ம் தேதி பிரிடோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Nelson Mandelaஇந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரின் நிலைமை 24 மணி நேரத்தில் மிகவும் மோசமாகிக்கொண்டிருப்பதாக ஜனாதிபதி மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

அதிபர் ஜாகோப் ஜூமா நேற்று மாலை அவரை சந்தித்து வந்த பின்னர் இந்த செய்தியை உறுதிபடுத்தினார்.