Home 13வது பொதுத் தேர்தல் நாடாளுமன்ற சபாநாயகராக பண்டிகார் அமின் மீண்டும் தேர்வு!

நாடாளுமன்ற சபாநாயகராக பண்டிகார் அமின் மீண்டும் தேர்வு!

503
0
SHARE
Ad

Pandikar Amin Mulia,கோலாலம்பூர், ஜூன் 24 – நாடாளுமன்ற சபாநாயகராக மீண்டும் பண்டிகார் அமின் மூலியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று நடந்த 13 ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், 133 வாக்குகள் பெற்று பண்டிகார் மீண்டும் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளார்.

மக்கள் கூட்டணியின் சார்பாக முன்மொழியப்பட்ட வேட்பாளரான முன்னாள் கூட்டரசு நீதிபதி அப்துல் காதிர் சுலைமான் 89 வாக்குகள் பெற்றார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, அதன் செயலாளர் ரோஸ்மி ஹாம்சா, சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்டுள்ள வேட்பாளர்களுக்கு வாக்களுக்கும் படி இரு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையும்  கேட்டுக்கொண்டார்.

அதன் படி, பண்டிகார் 133 வாக்குகளை அதாவது தேசிய முன்னணியைச் சேர்ந்த 133 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அதே போல் அப்துல் காதிர், பக்காத்தானின் 89 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று தோல்வியுற்றார்.