Home கலை உலகம் திரையுலகில் மீண்டும் கால் பதிக்கிறார் நடிகை மதுபாலா

திரையுலகில் மீண்டும் கால் பதிக்கிறார் நடிகை மதுபாலா

720
0
SHARE
Ad

ஜூன் 24- நடிகை மதுபாலா 1990 களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

அழகன், ரோஜா, வானமே எல்லை, ஜென்டில்மேன் உள்ளிட்ட பல வெற்றி  படங்களில் நடித்தார்.

madhubala-actress-hot-pics-wallpapers-5இந்தியிலும் நிறைய படங்களில் நடித்தார். மதுபாலாவுக்கு ஆனந்த்ஷா என்பவருடன் 1999-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

#TamilSchoolmychoice

திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்கிறார். அந்தகு முந்தா ஆதருவதா என்ற தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

தமிழ் படத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஆரோகணம் என்ற படத்தை இயக்கியவர். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.