Home நாடு கிள்ளான் பள்ளத்தாக்கில் புகைமூட்டம் அதிகரிப்பு!

கிள்ளான் பள்ளத்தாக்கில் புகைமூட்டம் அதிகரிப்பு!

521
0
SHARE
Ad

haze klang

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 –  இன்றைய நிலவரப்படி புகை மூட்டம் ஜோகூர் மற்றும் மூவாரில் குறைந்துள்ளது. ஆனால் கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகரித்துள்ளது.

சுகாதாரத் துறை இன்று காலை 11 மணியளவில் வெளியிட்ட நிலவரப்படி, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் கெமாமன் பகுதிகளில் புகையின் தாக்கம் முறையே 288 மற்றும் 253 (ஏ.பி.ஐ) ஆகப் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள  காற்று மாசு அட்டவணையின் (ஏ.பி.ஐ) ன்படி,

பத்துமூடா – 198

செராஸ் – 160

பந்திங் – 180

கோலசிலாங்கூர் – 128

ஷா ஆலம் – 162

போர்டிக்ஸன் மற்றும் நெகிரி செம்பிலான் – 292

கிள்ளான் துறைமுகம் – 288

கெமாமன் – 253

நாட்டில் மொத்தம் 26 இடங்களில் குறைவான புகைமூட்டம் நிலவுகிறது. 21 இடங்களில் ஆரோக்கியமற்ற சூழ்நிலை நிலவுகிறது.

போர்டிக்ஸன், கிள்ளான் துறைமுகம், கெமாமன் ஆகிய இடங்களில் மிகவும் ஆரோக்கியமற்ற சூழ்நிலை நிலவுகிறது.

காற்று மாசு அட்டவணையின் (ஏ.பி.ஐ) ன்படி,

0 முதல் 50 – இயல்பு நிலை,

51 முதல் 100 –  குறைவான புகைமூட்டம்,

101 முதல் 200 – ஆரோக்கியமற்ற சூழ்நிலை,

201 முதல் 300 – மிகவும் ஆரோக்கியமற்ற சூழ்நிலை,

301 மேல் தாண்டினால் அபாயகரமான சூழ்நிலை என்று கணக்கிடப்பட்டுள்ளது.