புதுடெல்லி, ஜூன் 25- பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று முதல் 2 நாட்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் அவர்களின் பயணத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் தீவிரவாதிகள், தலைநகர் ஸ்ரீநகரில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்று ராணுவ வாகனங்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது, காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதிகளுக்கு சிறப்பு திட்டங்களை பிரதமரும், சோனியாவும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குளிர்காலத்தில் கடும் உறைபனியால் காஷ்மீரில் அடிக்கடி போக்குவரத்து தடைபடுகிறது. எனவே, காஷ்மீர் பள்ளத்தாக்கை அனைத்து சீதோஷ்ண நிலையிலும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில், காசிகந்த்(காஷ்மீர்) – பானிஹல் (ஜம்மு) இடையே ரெயில் போக்குவரத்தை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்க உள்ளார்.