Home இந்தியா தீவிரவாதிகளை முறியடிப்போம்: காஷ்மீர் விழாவில் பிரதமர் பேச்சு

தீவிரவாதிகளை முறியடிப்போம்: காஷ்மீர் விழாவில் பிரதமர் பேச்சு

522
0
SHARE
Ad

ஸ்ரீநகர், ஜூன் 25- ஸ்ரீநகர் பகுதியில் நேற்று நிகழ்ந்த தாக்குதலில் 8 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று ஸ்ரீநகர் வந்தடைந்தனர்.

உத்தம்பூர் விமான தளத்தில் இருந்து வானூர்தி மூலம் கிஷ்ட்வாருக்கு சென்ற பிரதமர் கிஷ்ட்வார் நீர் மின்சக்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

manmohanஇந்த விழாவில் பேசிய பிரதமர் ‘நேற்றைய தாக்குதலில் தங்களின் உயிரை இழந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.

#TamilSchoolmychoice

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட நாம் உறுதி ஏற்றுள்ளோம். தீவிரவாத இயக்கங்களால் ஒருபோதும் வெற்றியடையவே முடியாது’ என்று கூறினார்.

நேற்றைய தாக்குதல் போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்த வேண்டும்.

தீவிரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் இந்தியராக ஒன்றுபட்டு நின்று தீவிரவாதிகளை வெற்றியடைய விடாமல் முறியடிப்போம்.

கிஷ்ட்வாரில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் பிரதமர் இன்று சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியை ஜம்முவின் பனிஹால் பகுதியுடன் இணைக்கும் புதிய ரெயில் சேவையை பிரதமரும் சோனியா காந்தியும் நாளை துவக்கி வைக்கின்றனர்.

காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்களையும் பிரதமர் நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.