Home கலை உலகம் ஜூன் 27-ல் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவிக்கு திருமணம்

ஜூன் 27-ல் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவிக்கு திருமணம்

581
0
SHARE
Ad

GV Prakash With Saindhavi Photo Shoot imageஜூன் 25- தமிழ்  திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜீ.வி.பிரகாஷ்குமார் – பின்னணி பாடகி சைந்தவி திருமணம் வரும் ஜுன் 27-ந் தேதி வியாழக்கிழமை சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷும்-சைந்தவியும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று அவரது குடும்பத்தினரும், திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். பொது நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாகவே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இவர்களுடைய திருமணத்துக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். அதைத் தொடர்து நிச்சயதார்த்தம் நடந்தது.

#TamilSchoolmychoice

இதில் ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவிக்கு வருகிற 27-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அன்று மாலை 6.30 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இருவருடைய குடும்பத்தினரும் செய்து வருகின்றனர்.