Home உலகம் மண்டேலா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: அதிபர் ஜுமாவின் வெளிநாட்டுப் பயணம் ரத்து

மண்டேலா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: அதிபர் ஜுமாவின் வெளிநாட்டுப் பயணம் ரத்து

552
0
SHARE
Ad

Nelson Mandelaஜோகன்ஸ்பர்க், ஜூன் 27- தென் ஆப்பிரிக்காவின் தந்தை என்று கருதப்படும் நெல்சன் மண்டேலாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

இதனால், அதிபர் ஜேகப் ஜுமா இன்று மொசாம்பிக் நாட்டுக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார்.

நேற்று இரவு ஜூமா, மண்டேலாவை காண வந்தார். அப்போதும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் தனது பயணத்தை ரத்து செய்வதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

nelson mandela94 வயதான மண்டேலா நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8-ந்தேதி பிரிட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உறுப்புகளின் இயக்கம் படிப்படியாக குறைவதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் அதிபராக பதவி ஏற்றார்.

ஐந்தாண்டுகள் மட்டும் அதிபராக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.