Home 13வது பொதுத் தேர்தல் “8 மாநிலங்களில் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டைப் படையாக உள்ளன” – கர்பால் சிங்

“8 மாநிலங்களில் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டைப் படையாக உள்ளன” – கர்பால் சிங்

540
0
SHARE
Ad

Karpal Singhஜோர்ஜ் டவுன், ஜூன் 29 – நாட்டில் மொத்தம் எட்டு மாநிலங்களில் சட்டமன்ற  தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டைப் படையாக இருப்பதால், தேர்தல் ஆணையம் உடனடியாக அவற்றில் ஒரு சட்டமன்றத்  தொகுதியை அதிகரிக்க வேண்டும். இதனால் ‘தொங்கு நிலை’ ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று இன்று ஆயர் ஈத்தாமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜசெக கட்சியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் வலியுறுத்தினார்.

திரங்கானு மாநிலத்தில் கோல பெசுட் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், அந்நிலை தான் ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதோடு, இன்னொரு விவகாரம் பற்றி அவர் கருத்துரைக்கையில், பக்காத்தானின் கறுப்பு 505 பேரணிகளுக்கு துருக்கி, வாஷிங்டன் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து, எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உதவி பெறுவதாக குற்றம் சாட்டியதற்காக முன்னாள் இந்தோனேசிய துணைத் தலைவர் ஜுஸுப் கல்லா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கர்பால் சிங் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஜூஸூப் கல்லாவின் இந்த கருத்து பக்காத்தான் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளை கடுமையாகப் பாதிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.