Home நாடு நேசா இயக்குநர் தேர்தலில் ஆர்.ராஜண்ணன் அணியினர் வெற்றி பெற்றனர்!

நேசா இயக்குநர் தேர்தலில் ஆர்.ராஜண்ணன் அணியினர் வெற்றி பெற்றனர்!

644
0
SHARE
Ad

Subra-Tan-Sri-Featureஜூன் 30 – இன்று காலை கோலாலம்பூரில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்ற நேசா கூட்டுறவுக் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் நான்கு இயக்குநர் பதவிகளுக்கான தேர்தலில் நேசாவின் நடப்பு இயக்குநர் ஆர்.இராஜண்ணன், நேசாவின் வாரியக் குழுத் தலைவர் டத்தோ மெய்யப்பன், ஜோகூர் பாருவைச் சேர்ந்த கிருஷ்ணன், பாஸ்கரன், ஆகிய நால்வரும் வெற்றி பெற்றனர்.

#TamilSchoolmychoice

இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆர்.பாலகிருஷ்ணன், கே.பி.சாமி, ஏ.கோவிந்தராஜூ, எஸ்.நடராஜன் ஆகிய நால்வரும் தோல்வியடைந்தனர்.

டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்ரமணியம் (படம்)  நீண்ட காலமாக நேசா கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 250 பேராளர்கள் இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தார்கள்.