Home நாடு நேசா கூட்டுறவுக் கழகத்தின் முன்னாள் தலைவர் இராஜண்ணன் காலமானார்

நேசா கூட்டுறவுக் கழகத்தின் முன்னாள் தலைவர் இராஜண்ணன் காலமானார்

913
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : மஇகா தலைமையகத்தின் முன்னாள் நிர்வாகச் செயலாளரும், நேசா கூட்டுறவுக் கழகத்தின் முன்னாள் தலைவருமான இராஜண்ணன் இராவணையா உடல்நலக் குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12)  காலமானார்.

மலாயாப் பல்கலைக் கழகப் பட்டதாரியான இராஜண்ணன், தனது பட்டப் படிப்புக்குப் பின்னர் மஇகா தலைமையகத்தில் நிர்வாக அதிகாரியாகப்  பணியில் சேர்ந்தார்.

அவர் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் அமரர் அ.துரைராஜ் நிர்வாகச் செயலாளராகப் பணிபுரிந்தார்.

#TamilSchoolmychoice

1979-ஆம் ஆண்டில் அ.துரைராஜ் அப்போதைய மஇகா தேசியத் தலைவரும் அமைச்சருமான டான்ஶ்ரீ மாணிக்கவாசகத்தின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து இராஜண்ணன், மஇகா தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1980-ஆம் ஆண்டு வாக்கில் மஇகா தலைமையகப் பணியில் இருந்து விலகிய இராஜண்ணன், நேசா கூட்டுறவுக் கழகத்தின் அதிகாரிகளில் ஒருவராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் நேசா கூட்டுறவுக் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

அதன் பின்னர் நேசா கூட்டுறவுக் கழகத்தின் தலைமைச் செயல் அதிகாரி, இயக்குநர், வாரியத் தலைவர் எனப் பல பொறுப்புகள் வகித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நேசா தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.

மறைந்த இராஜண்ணன் அவர்களின் இறுதிச் சடங்குகள் நாளை திங்கட்கிழமை (செப்டம்பர் 13) நடைபெறும்.

கொவிட்-19 காரணமாக கட்டுப்பாடுகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்பதால் நேரில் வந்து அனுதாபம் தெரிவிக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal