Home கலை உலகம் அன்னக்கொடி பட விவகாரம்: தேனியில் பாரதிராஜா வீட்டருகே ஆர்ப்பாட்டம்

அன்னக்கொடி பட விவகாரம்: தேனியில் பாரதிராஜா வீட்டருகே ஆர்ப்பாட்டம்

532
0
SHARE
Ad

தேனி, ஜூன் 30- பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கொடி என்ற திரைப்படம் தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

945034_512832938769768_1894084375_nஇந்த படத்தை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திடீர் என ஒன்று திரண்டனர். அவர்கள் மாவட்ட செயலாளர் தமிழன் தலைமையில் தேனியில் உள்ள பாரதிராஜா வீட்டை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்தனர். பாரதிராஜா வீட்டருகே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் பார்வர்டு பிளாக் கட்சியினர் பாரதிராஜா வீட்டருகே கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

#TamilSchoolmychoice

அதன்பின்னர் பார்வர்டு பிளாக் கட்சியினர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

மனுவில் கூறி இருப்பதாவது: அன்னக்கொடி சினிமாவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் உள்ளது.

காதல் மற்றும் கலப்பு திருமண பிரச்சினைகளால் தர்மபுரி நாயக்கன் கொட்டாய், மரக்காணப் பகுதியில் நடந்த கலவரங்கள் தற்போது ஓய்ந்து உள்ளது. இந்த சினிமா மீண்டும் தென் தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுத்துவதாக உள்ளது.

சமூகத்தை கொச்சைப்படுத்தி நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயலை பாரதிராஜா செய்து உள்ளார். இதனை கண்டிக்கிறோம். எனவே அன்னக்கொடி படத்தை தடை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.