Home உலகம் நெல்சன் மண்டேலா குடும்பத்தாருடன் ஒபாமா சந்திப்பு

நெல்சன் மண்டேலா குடும்பத்தாருடன் ஒபாமா சந்திப்பு

479
0
SHARE
Ad

ஜோகனஸ்பர்க், ஜூன் 30- ஒருவார கால பயணமாக தென் ஆப்பிரிக்கா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் obamaஒபாமா, அந்நாட்டின் விடுதலை போராட்ட வீரரும், முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தாரை சந்தித்து பேசினார்.

ஜோகனஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவும் உடன் இருந்தார்.

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மண்டேலாவின் உடல் நிலை முன்னேற்றம் குறித்து அவரது குடும்பத்தாரிடம் ஒபாமா கேட்டறிந்தார்.

#TamilSchoolmychoice

மண்டேலா குடும்பத்தாரின் விருப்பத்திற்கிணங்க அவரை ஒபாமா  மருத்துவமனைக்கு சென்று சந்திக்கப்போவதில்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், மண்டேலா குடும்பத்தாருடன் நிகழ்ந்த இந்த சந்திப்பு சுமார் 1/2 நேரம் நீடித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.