Home உலகம் மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டம் தென்னாப்பிரிக்காவில் தான் வேரூன்றியது: மகள்களுக்கு ஒபாமா விளக்கம்

மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டம் தென்னாப்பிரிக்காவில் தான் வேரூன்றியது: மகள்களுக்கு ஒபாமா விளக்கம்

4583
0
SHARE
Ad

ஜோகனஸ்பர்க், ஜூலை 1- தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அந்நாட்டின் முன்னாள் அதிபரும் விடுதலை போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலா 27 ஆண்டு காலம் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரோபன் தீவு சிறையை நேற்று பார்வையிட்டார்.

மனைவி மிச்சேல் ஒபாமா மற்றும் அவர்களின் இரு மகள்களும் உடன் சென்றிருந்தனர்.

121106_obama_smile1_605_reutநெல்சன் மண்டேலா அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கொட்டிலை பார்வையிட்ட ஒபாமா, அந்த மாவீரரின் வாழ்க்கையை பற்றிய சிறு குறிப்புகளை மகள்களுக்கு கூறினார்.

#TamilSchoolmychoice

அப்போது, இந்திய விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா காந்தியை பற்றியும் மகள்கள் சாஷா மற்றும் மலியா ஆகியோருக்கு ஒபாமா விளக்கி கூறினார்.

‘அகிம்சை முறையில் அரசியல் போராட்டத்தில் ஈடுபட நினைத்த மகாத்மா காந்தியின் முதல் முயற்சி இங்கே தென்னாப்பிரிக்காவில் தான் வேரூன்றியது. அவர் இங்கே தான் வழக்கறிஞராக பணியாற்றினார். இங்கே தான் தனது முதல் அரசியல் இயக்கத்தை அவர் தொடங்கினார்.

gandhiஇந்தியா திரும்பிய போது அவர் கடைபிடித்த அகிம்சை கொள்கையால் அந்நாடு விடுதலை பெற்றது.

மகாத்மா காந்தியின் அகிம்சை முறையிலான அரசியல் போராட்டம் லூதர் மார்ட்டின் கிங் உள்ளிட்ட தலைவர்களை வெகுவாக ஈர்த்தது என்று ஒபாமா தனது மகள்களிடம் விளக்கி கூறினார்.

இதற்கு முன்னரும் தனது பேச்சின் போது மகாத்மா காந்திக்கு புகழாரம் சூட்டியுள்ள ஒபாமா, ‘தனது அகிம்சை முறை போராட்டங்களால் அமெரிக்கர்கள், மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட கருப்பின அமெரிக்கர்களை வெகுவாக ஈர்த்தவர் மகாத்மா காந்தி.

அவருடன் அமர்ந்து உணவு அருந்த முடியவில்லையே என வருந்துகிறேன்’ என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.