Home அரசியல் தாயின் சம்மதத்தோடு தான் குழந்தையை மதம் மாற்றம் செய்ய முடியும் – அன்வார்

தாயின் சம்மதத்தோடு தான் குழந்தையை மதம் மாற்றம் செய்ய முடியும் – அன்வார்

386
0
SHARE
Ad

ANWARபெட்டாலிங் ஜெயா, ஜூலை 2 – ஒரு குழந்தையை மதம் மாற்றம் செய்ய வேண்டுமானால் அதன்  தாயின் சம்மதம் தேவை என்பது தான் இஸ்லாம் மதத்தின் நிலை என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றதிற்கு வெளியே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அன்வார், பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் இந்த இஸ்லாம் சட்ட திருத்தம் நடைமுறைக்கு வரும் முன் அது குறித்து கலந்தாலோசிக்க உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தம் குறித்து நன்கு ஆராய்ந்தோம். இது குறித்து நான், பாஸ் தலைவர் ஹாடி ஆவாங் மற்றும் ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருடனும் கலந்தாலோசித்தேன்.” என்று அன்வார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அதோடு “தந்தை மட்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தாயார் மாறாததால் அந்தக் குழந்தையை நபிகள் நாயகம், அதன் தாயிடமே திருப்பி அனுப்பிய குறிப்பிட்ட நிகழ்வுகள் வரலாற்றில் நடந்துள்ளன” என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் உட்பட பல அரசு சாரா இயக்கங்களுடன் இவ்விவகாரம் குறித்து பக்காத்தான் கலந்தாலோசிக்கப் போவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த சட்டதிருத்தம் இஸ்லாம் மற்றும் இஸ்லாம் அல்லாதவர்கள் என்று இரு பிரிவுகளாகப் பிரித்து விடக்கூடாது. எனவே அது பற்றி சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அன்வார் தெரிவித்தார்.