Home இந்தியா உத்தரகாண்ட் முதல்-மந்திரி விஜய் பகுகுணா மீது காங்கிரஸ் கடும் அதிருப்தி

உத்தரகாண்ட் முதல்-மந்திரி விஜய் பகுகுணா மீது காங்கிரஸ் கடும் அதிருப்தி

603
0
SHARE
Ad

டேராடூன், ஜூலை. 2- உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு மீட்புப் பணிகளை செய்து வருகிறார்கள்.

மீட்புப் பணிகளை ஓரளவு செய்து முடிப்பதற்கே சுமார் 16 நாட்கள் ஆகி விட்டது. மீட்புப் பணிகளில் உத்தரகாண்ட் மாநில அரசு மிகவும் மெத்தனமாக இருந்ததே இதற்கு காரணம் என்று புகார்கள் கூறப்பட்டன.

uttarakhandஉத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. முதல்- மந்திரியாக விஜய் பகுகுணா உள்ளார். பேரழிவு ஏற்பட்டதும் அவர் விரைந்து செயல்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசும் அவரை கண்டு கொள்ளவில்லை. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எச்சரிக்கை விடுத்த பிறகே 4 நாட்கள் கழித்து மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து குழுக்களை ஏற்படுத்தின.

#TamilSchoolmychoice

குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி உத்தரகாண்ட் பேரழிவு பற்றி அறிந்ததும் உடனடியாக அந்த மாநில தலைநகர் டேராடூனுக்கு சென்று முகாமிட்டு தன் மாநிலத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை மீட்டு அழைத்து சென்றார். இரண்டே நாளில் அவர் அந்த மீட்புப் பணியை முடித்து விட்டார்.

Uttar flood_PTIஅதன்பிறகும்கூட உத்தரகாண்ட் முதல்-மந்திரி விஜய் பகுகுணா வேகம் காட்டவில்லை என்ற அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை சரியாக செய்யாததால் உத்தரகாண்ட் மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இந்த நிலையில் விஜய் பகுகுணா மீது உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சியினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பேரழிவு மீட்பு பணிகளை திட்டமிட்டு செய்ய தெரியவில்லை என அவர்கள் பகுகுணாவை குறை கூற தொடங்கியுள்ளனர்.

UK-CM-Bahuguna-விஜய் பகுகுணா மிகவும் மெல்ல செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் கோபம் அடைந்துள்ளனர். காங்கிரஸ் மத்திய மந்திரிகளும் விஜய் பகுகுணா மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இழப்பு மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பாக எதையும் சொல்ல தெரியவில்லை என்று விஜய் மீது அவர்கள் குறை கூறுகிறார்கள்.

மத்திய நீர் வளத்துறை மந்திரி ஹரீஸ் ராவத் உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். முதல்-மந்திரி பகுகுணாவுக்கு எதிர்க்கட்சியினரிடம் இருந்து மட்டுமின்றி சொந்த கட்சிக்காரர்களிடம் இருந்தும் எதிர்ப்பு வரத்தொடங்கி உள்ளதால் நெருக்கடி அதிகரித்துள்ளது.

அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று காங்கிரசில் ஒருசாரார் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால் மீட்புப் பணி குறித்த குற்றச்சாட்டுக்காக முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.