Home Featured கலையுலகம் ‘அன்னக்கொடி’ படத்தை எதிர்த்து போராட்டம்: பாரதிராஜா வீட்டில் போலீஸ் குவிப்பு

‘அன்னக்கொடி’ படத்தை எதிர்த்து போராட்டம்: பாரதிராஜா வீட்டில் போலீஸ் குவிப்பு

958
0
SHARE
Ad

ஜூலை 5- பாரதிராஜா இயக்கிய ‘அன்னக்கொடி‘ படம் தற்போது வெளியாகி  ஓடிக்கொண்டு இருக்கிறது.

வெவ்வேறு சாதியைச் சேர்ந்த காதல் ஜோடியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. திருமணமான பெண் காதலனுடன் ஓடிப்போவது போன்றும் காட்சி உள்ளது.

M3190_1annakodiஇப்படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாக சில அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். தேனி, சிவகங்கை பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

#TamilSchoolmychoice

சென்னையில் உள்ள பாரதிராஜா வீட்டை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தகவல் பரவியது. இதையடுத்து திருவான்மியூர், கபாலீஸ்வரர் நகரில் உள்ள பாரதிராஜா வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டது.

அந்த வழியாக சென்ற வாகனங்களையும் நிறுத்தி சோதனை போட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்ய போலீஸ் வேன்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.