Home உலகம் எகிப்து இளவரசி பாவ்சியா 92 வயதில் மரணம்

எகிப்து இளவரசி பாவ்சியா 92 வயதில் மரணம்

899
0
SHARE
Ad

கெய்ரோ, ஜூலை 5- எகிப்தின் கடைசி அரச குடும்பத்தின் உறுப்பினரும், பதவியிறக்கப்பட்ட ஈரான் அரசரின் முதல் மனைவியுமான இளவரசி பாவ்சியா நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

164486அவருக்கு வயது 92. 1936-ல் எகிப்தை ஆண்ட அரசர் முதலாம் பாத்தின் மகள்தான் பாவ்சியா. பாவ்சியாவின் சகோதரரும், மருமகனும் வாரிசுகளாக தொடர்ந்து அரியணை ஏறினர்.

1953-ம் ஆண்டு அரச குடும்ப ஆட்சி கவிழ்க்கப்பட்டு, எகிப்து நாடு குடியரசு நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. 1939-ம் ஆண்டு ஈரான் இளவரசர் முகமது ரெசா பாலவியை பாவ்சியா மணந்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 1945-ல் விவாகரத்து பெற்றனர்.

#TamilSchoolmychoice

இதையடுத்து 1949-ம் ஆண்டு எகிப்து நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரியை மணந்த பாவ்சியா எகிப்திலேயே தங்கியிருந்தார். எகிப்தின் அலெக்சாண்டிரியா நகரில் மரணம் அடைந்த பாவ்சியாவின் உடல் கெய்ரோவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரச குடும்பத்து உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Comments