Home வணிகம்/தொழில் நுட்பம் நெஸ்லே பால் பொருட்கள் விலை உயரும்!

நெஸ்லே பால் பொருட்கள் விலை உயரும்!

571
0
SHARE
Ad

Nestle-Featureகோலாலம்பூர், ஜூலை 7 – உலகெங்கிலும் பால் சம்பந்தப்பட்ட அடிப்படை பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்ட காரணத்தால் அதைத் தொடர்ந்து, நெஸ்லே வர்த்தக முத்திரையுடன் விற்பனை செய்யப்படும் பால் பொருட்களின் விலைகளும் உயரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

சுமார் 4 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை நெஸ்லே பால் பொருட்களின் விலைகள் உயரும் என்றாலும் அதனால் அந்நிறுவன குழுமத்தின் வர்த்தக நிலை பாதிக்கப்படாது என அஃபின் முதலீட்டு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டும் அடுத்து வரும் சில ஆண்டுகளிலும் நெஸ்லே நிறுவனத்தின் இலாபம் 5.7 சதவீதம் வரை உயரும் என்றும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.

பால்மாவின் விலை கடந்த ஆண்டில் மட்டும் 37 சதவீதம் முதல் 38 சதவீதம் வரை உயர்ந்திருப்பதால் பாலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் நெஸ்லே பொருட்களின் விலை உயர்வு நியாயமான ஒன்றுதான் என்றும் தெரிவித்துள்ள அந்த ஆய்வறிக்கை, டச் லேடி போன்ற மற்ற நிறுவனங்களும் பால் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளதையும் ஒப்பிட்டு சுட்டிக் காட்டியுள்ளது.

இதற்கிடையில், 2013ஆம் ஆண்டில் மேலும் 200 மில்லியன் ரிங்கிட்டை முதலீடாக நெஸ்லே செலவழிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு நெஸ்லே பொருட்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை விரிவாக்குவதற்கும், தயாரிப்பு இயந்திரங்களை மேம்படுத்துவதற்கும் செலவழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நெஸ்லே பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் இந்த முதலீட்டு விரிவாக்கம் அத்தியாவசியமாகின்றது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.