Home 13வது பொதுத் தேர்தல் கோலபெசுட் தொகுதியில் பாஸ் போட்டியிடத் தேவையில்லை – இட்ரிஸ் ஜோஸுவா கருத்து

கோலபெசுட் தொகுதியில் பாஸ் போட்டியிடத் தேவையில்லை – இட்ரிஸ் ஜோஸுவா கருத்து

574
0
SHARE
Ad

KL19_190404_LEBUHRAYA PANTAI TIMURகோலாலம்பூர், ஜூலை 8 – கோலபெசுட் இடைத்தேர்தலில், பாஸ் கட்சி போட்டியிட வேண்டிய அவசியமே இல்லை என்று கல்வித்துறை அமைச்சர் (II) இட்ரிஸ் ஜோஸுவா கூறியுள்ளார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இட்ரிஸ்,

“நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் கோல பெசுட் தொகுதியில், தேசிய முன்னணி பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. எனவே பாஸ் கட்சி வெற்றியடைய வேண்டுமானால் 1,200 வாக்குகள் தேவை. மக்களின் மனதை அவ்வளவு எளிதில் மாற்றிவிடமுடியாது. அதோடு பாஸ் கட்சிக்கு எப்படி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது என்றும் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், “பெசுட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும்,அம்னோ பிரிவுத் தலைவர் என்ற முறையிலும் அந்தத் தொகுதி பற்றி நன்கு அறிவேன்” என்று திரங்கானு மாநில முன்னாள் மந்திரி பெசாரும், நடப்பு பெசுட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான இட்ரிஸ் கூறியுள்ளார்.