Home 13வது பொதுத் தேர்தல் கோல பெசுட் இடைத்தேர்தல்: பாஸ் பிரச்சாரங்களுக்கு ஹூசாம் மூசா தலைமை வகிப்பார்

கோல பெசுட் இடைத்தேர்தல்: பாஸ் பிரச்சாரங்களுக்கு ஹூசாம் மூசா தலைமை வகிப்பார்

576
0
SHARE
Ad

Husam-Musa-2-Sliderபெட்டாலிங் ஜெயா, ஜூலை 9 – கோல பெசுட் இடைத்தேர்தல் பிரச்சாரங்களுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை டத்தோ ஹூசாம் மூசாவிற்கு, பாஸ் கட்சி வழங்கியுள்ளது என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

பாஸ் கட்சியின் உதவித் தலைவரான ஹூசாம் மூசாவிற்கு உதவியாக பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குனர் டாக்டர் ஹாட்டா ராம்லி மற்றும் திரங்கானு மாநில பாஸ் உதவி ஆணையர் சடிபுல் பஹ்ரி மாமட் ஆகியோர் செயல்படுவார்கள்.

அதோடு பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் மற்றும் அவரது உதவியாளர் முகமட் ஷாபு ஆகியோரும் ஆலோசனை கூறுவார்கள் என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

மேலும், கோலபெசுட் தொகுதியில் போட்டியிடவிருக்கும் தனது வேட்பாளரை பாஸ் கட்சி இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்றும், இடைத்தேர்தல் நடக்கும் நாள் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி என்றும் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.