Home 13வது பொதுத் தேர்தல் “இட்ரிஸ் வெளியிட்ட அறிக்கை ஆணவமிக்கது” – ஹூசாம் மூசா பதிலடி

“இட்ரிஸ் வெளியிட்ட அறிக்கை ஆணவமிக்கது” – ஹூசாம் மூசா பதிலடி

595
0
SHARE
Ad

husam-musa5-nov3கோலாலம்பூர், ஜூலை 9 – கோல பெசுட் இடைத்தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிட வேண்டாம் என்று கூறிய கல்வி அமைச்சர் (II) இட்ரிஸ் ஜூஸோ ஒரு ஆணவம் பிடித்தவர் என்று பாஸ்  கட்சியின் உதவித் தலைவர் ஹூசாம் மூசா விமர்சித்துள்ளார்.

கோல பெசுட் இடைத்தேர்தல் பிரச்சாரங்களுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள டத்தோ ஹூசாம் மூசா, நேற்று இட்ரிஸ் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “இட்ரிஸின் அறிக்கை மிகவும் ஆணவமிக்கது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில், தேசிய முன்னணி பெரும்பான்மையான வாக்குகள் பெற்று மீண்டும் தனது இடத்தை தக்க வைக்கும் என்று அவர் கூறிக்கொண்டாலும், அத்தொகுதியில் பாஸ் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஹூசாம் மூசா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கோல பெசுட் இடைத்தேர்தல் தொடர்பாக, இட்ரிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி பெரும்பான்மையான வெற்றியை பெற்றுள்ளதால்,அவ்வெற்றி இடைத்தேர்தலிலும் தொடரும் என்றும், எனவே பாஸ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமே இல்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.