Home உலகம் ஜப்பான் மன்னர் நவம்பர் மாதம் இந்தியா வருகிறார்

ஜப்பான் மன்னர் நவம்பர் மாதம் இந்தியா வருகிறார்

540
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூலை 10- ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ (படம்) வரும் நவம்பர் மாதம் ஒருவார பயணமாக இந்தியா வருகிறார். அவரது மனைவி மிசிக்கோ-வும் உடன் வருகிறார்.

Akihito_1822911cஇந்தியா-ஜப்பான் இடையிலான நல்லுறவை புதுப்பிக்கும் விதமாக பிரதமர் மன்மோகன் சிங், கடந்த மே மாதம் ஜப்பான் சென்றார்.

3 நாள் ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்த அவருக்கு ஜப்பான் அரண்மனையில் வெகு சிறப்பான வரவேற்பும் பிரமாண்டமான விருந்தும் அளித்து மன்னர் அகிஹிட்டோ கவுரவித்தார்.

#TamilSchoolmychoice

அப்போது, மன்னரையும் ராணியையும் இந்தியாவிற்கு விருந்தினராக வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்று மன்னர் அகிஹிட்டோ, ராணி மிசிக்கோ ஆகியோர் வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி இந்தியா வர ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஒருவார காலம் அவர்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வார்கள் என ஜப்பான் மன்னரின் செய்தி தொடர்பாளர் இன்று அறிவித்துள்ளார்.