Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் மனு: கிளந்தான் செலிஸிங் சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணி தக்கவைத்தது!

தேர்தல் மனு: கிளந்தான் செலிஸிங் சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணி தக்கவைத்தது!

559
0
SHARE
Ad

kelantanகோலாலம்பூர், ஜூலை 10 – கிளந்தான் மாநிலம் செலிஸிங் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து பாஸ் வேட்பாளர் டாக்டர் சைபுல் பஹ்ரிம் முகமட் தாக்கல் செய்திருந்த தேர்தல் மனுவை, இன்று கோத்தா பாரு தேர்தல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேசிய முன்னணி வழக்கறிஞர் ஹபாரிஸாம் ஹாருன், அந்த மனுவில் தேர்தல் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கூறப்படவில்லை என்று வாதாடினார்.

அதனைத் தொடர்ந்து, நீதிபதி டத்தோ ஸாமானி அப்துல் ரஹிம், அம்மனுவில் போதுமான விவரங்கள் இல்லை என்று கூறி அதனைத் தள்ளுபடி செய்தார்.

#TamilSchoolmychoice

நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலில், பாஸ் வேட்பாளர் டாக்டர் சைபுல் பஹ்ரின், தேசிய முன்னணி வேட்பாளர் சுல்கிப்ளி அலியிடம், 107 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அத்தொகுதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து சைபுல் தேர்தல் மனுவை தாக்கல் செய்தார்.