Home கலை உலகம் வாடகைத்தாய் மூலம் பிறந்த தனது குழந்தைக்கு ‘அப்ராம்’ என்று பெயர் சூட்டினார் ஷாருக்கான்

வாடகைத்தாய் மூலம் பிறந்த தனது குழந்தைக்கு ‘அப்ராம்’ என்று பெயர் சூட்டினார் ஷாருக்கான்

725
0
SHARE
Ad

இந்திப்பட உலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான். இவருக்கு திருமணமாகி கவுரி என்ற மனைவியும், சுகானா என்ற மகள், ஆர்யான் என்ற மகனும் உள்ளனர்.

ஷாருக்கான்–கவுரி தம்பதிக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசை. ஆனால் கவுரி கர்ப்பமாகி குழந்தை பெறுவதை விரும்பவில்லை. வாடகை தாய் மூலம் கணவருக்கு குழந்தை பெற்றுக்கொடுக்க முடிவு செய்தார்.

லண்டனில் வசிக்கும் கவுரியின் நெருங்கிய உறவுக்காரப் பெண்ணை மும்பை வரவழைத்து அங்குள்ள மருத்துவமனையில்  செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

shah rukh khanகரு வளர்ந்ததும் வாடகைத்தாய் கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது. வாடகைத்தாய் மருத்துவர்கள்  கண்காணிப்பில் ஷாருக்கான் ரகசிய இடத்தில தங்க வைத்தார். இந்த விஷயம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

ஷாருக்கான் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று பார்த்து வந்தார். இது மற்றவர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியது. மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாக மும்பை சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. கடைசியாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவரம் வெளியானது.

குறிப்பிட்ட காலத்துக்கு 2 மாதத்துக்கு முன்பே வாடகைத்தாய்க்கு குழந்தை பிறந்தது. குறை பிரசவம் என்பதால் மும்பை மருத்துவமனையில்  இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். உடல் நலம் தேறியதும் குழந்தையை ஷாருக்கான் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார். வாடகைத் தாய் தனது வேலை முடிந்து லண்டன் திரும்பி விட்டார். இந்த விஷயங்களும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு மும்பை மாநகராட்சியில் ஷாருக்கான் விண்ணப்பித்து இருந்தார். மாநகராட்சி அதிகாரிகள்  மருத்துவமனையில் விசாரித்து ஆவணங்களை சரி பார்த்தனர். ஷாருக்கான் வீட்டுக்கு நேரில் சென்று குழந்தையை பார்த்த பின்னர் பிறப்பு சான்றிதழ் வழங்கினார்கள்.

மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ஷாருக்கானுக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்த தகவல் வெளியே தெரிய வந்தது. அவருக்கு அண் குழந்தை பிறந்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஷாருக்கான் தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப் படவில்லை. குழந்தை பற்றி மும்பையில் பல்வேறு வதந்திகள் கிளப்பப்பட்டது.

shah-rukhஇதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஷாருக்கான் தனது மவுனத்தை கலைத்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:–

எனக்கு புதிதாக பிறந்த இனிமையான குழந்தை பற்றி பல்வேறு விதமான பேச்சுகள் உலா வருகிறது. பல மாதங்கள் குறை பிரசவத்தில் இருந்த குழந்தை கடைசியாக என் வீட்டுக்கு வந்து விட்டான். நான் என் மனைவி கவுரி மற்றும் குடும்பத்தினர் அந்த குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த விஷயத்தில் நீண்ட நாட்கள் மவுனம் காக்க விரும்பவில்லை.

குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது ஆணா? பெண்ணா? என்று சோதனை செய்து பார்க்கவில்லை. குழந்தை பிறந்த பின்புதான் அது ஆண்குழந்தை என்று தெரிந்து கொண்டேன். வீட்டுக்கு வந்த பின்பு ‘அப்ராம்’ என்று பெயர் சூட்டி அன்பு செலுத்தி வளர்த்து வருகிறோம்.

என் குழந்தையை மருத்துவமனையில்  கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட டாக்டர்கள், தாதியர்கள் அனைவருக்கும் நன்றி. இது என்குடும்ப விவகாரம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு ஷாருக்கான் கூறியுள்ளார்.