Home கலை உலகம் இசையமைப்பாளரான சிம்பு தம்பி குறளரசன்

இசையமைப்பாளரான சிம்பு தம்பி குறளரசன்

571
0
SHARE
Ad

ஜூலை 11- நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் சினிமா இசையமைப்பாளராகியுள்ளார். பாண்டிராஜ் இயக்கும் புது படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் என்ற பெயரில் சிம்புவே தயாரிக்கிறார்.

simbuகாதல் கதையாக தயாராகும் இப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக முன்னணி நடிகை நடிக்கிறார். இதர நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

இந்த படத்தில்தான் குறளரசனுக்கு இசையமைப்பாளர் வாய்ப்பு கிட்டியுள்ளது. குறளரசன் டியூன்களை கேட்டு வியப்பாகி இப்படத்துக்கு இசையமைக்க வைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

சிம்பு தற்போது லண்டனில் வி.டி.வி. கணேஷ், மீரா ஜாஸ்மின் நடிக்கும் ’இங்க என்ன செல்லுது’ என்ற படத்தின் பாடல் பதிவில் பங்கேற்று உள்ளார்.

வருகிற 19–ந் தேதி அவர் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு இப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.