Home நாடு ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கூட ‘ஐபிசிஎம்சி’ என்ற அமைப்பு உள்ளது – கமிலியா

ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கூட ‘ஐபிசிஎம்சி’ என்ற அமைப்பு உள்ளது – கமிலியா

669
0
SHARE
Ad

Kamiliaகோலாலம்பூர், ஜூலை 11 – ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (Independent Police Complaints and Misconduct Commission – ஐபிசிஎம்சி) அமைக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, மலேசியாவில் ஐபிசிஎம்சி ஐ அமைப்பது எப்படி அரசியலமைப்புக்கு முரணானது ஆகும் என்று முன்னாள் அம்னோ மகளிர் பிரிவு துணைத்தலைவியான கமிலியா இப்ராகிம் (படம்) கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு, ஐபிசிஎம்சி அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்த அரச விசாரணை ஆணையத்தின் 15 உறுப்பினர்களில் கமிலியாவும் ஒருவர்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்  ஐபிசிஎம்சி அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஹாங் காங் மற்றும் குயின்ஸ்லேண்டு போன்ற நாடுகளிலும் அதே முறை தான் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் ஐபிசிஎம்சி செயல்படும் போது இங்கு ஏன் அமைக்கப்படக் கூடாது” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், “தடுப்புக்காவல் மரணங்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் போன்றவற்றில் காவல்துறையே தங்களை விசாரித்துக்கொள்ளக்கூடாது. அதற்குப் பதிலாக ஐபிசிஎம்சி அது போன்ற விசாரணைகளை செய்ய வேண்டும்” என்றும் கமிலியா தெரிவித்தார்.

“ஐபிசிஎம்சி யை அமைப்பதன் நோக்கம், குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறை எந்த ஒரு ஊழலும் இன்றி நன்கு செயல்பட வேண்டும். காவல்துறை தங்களது கடமைகளை சரிவர செய்யாமல் தூங்குவதை நாம் அனுமதிக்க முடியாது” என்று கமிலியா கூறியுனார்.

தடுப்புக்காவலில் அதிகம் இறந்தவர்கள் மலாய்காரர்கள்

தடுப்புக்காவலில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மலாய்காரர்கள் தான். மற்ற இனத்தவர்கள் அல்ல என்று கமிலியா குறிப்பிட்டுள்ளார்.

மலாய் இனத்தவர்கள் தடுப்புக் காவல் மரணம் குறித்து அதிகம் கேள்வி கேட்க விரும்பாததும் அல்லது அவர்களது உறவினர்கள் தடுப்புக்காவலில் இறந்ததை வெளியே சொல்ல வெட்கப்படுவதும் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த 2000 ஆம் ஆண்டிற்கு முன்னாள் தடுப்புக்காவலில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மலாய்காரர்கள். அது ஏன் நடக்கிறது என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கமிலியா கூறினார்.

அரச ஆணையத்தின் 15 உறுப்பினர்களால் இதுவரை 125 பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும், ஆனால் காவல்துறையின் வலிமையை அதிகப்படுத்துவதில் மட்டுமே அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.