Home நாடு கோல பெசுட் இடைத்தேர்தல்: இன்று வேட்புமனுத் தாக்கல்! பாஸ்-தே.மு. நேரடி மோதல்!

கோல பெசுட் இடைத்தேர்தல்: இன்று வேட்புமனுத் தாக்கல்! பாஸ்-தே.மு. நேரடி மோதல்!

527
0
SHARE
Ad

kola besut by electionதிரங்கானு, ஜூலை 12 – (கூடுதல் தகவல்களுடன்) திரங்கானு மாநிலம் கோல பெசுட் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை நடைபெற்றது.

இதில் பாஸ் கட்சி வேட்பாளரும், தேசிய முன்னணி-அம்னோ வேட்பாளரும் நேரடியாக களம் இறங்குகின்றனர். இரண்டு கட்சிகளின் சார்பாகவும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வேட்பு மனுத் தாக்கலில் கலந்து கொண்டனர்.

பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அசிசும் இந்த வேட்பு மனுத் தாக்கலில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினரான ரஹ்மான் மொஹ்தார் கடந்த ஜூன் மாதம்  26 ஆம் தேதி நுரையீரல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் வரும் ஜூலை 24 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

கடந்த புதன்கிழமை, கோல பெசுட் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை பாஸ் கட்சியும், தேசிய முன்னணியும் அறிவித்தன.

அதன்படி, பாஸ் வேட்பாளராக அஸ்லான் (என்ற) எண்டுட் யூசோப் (வயது 46) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கட்டுமான தொழிலில் ஒப்பந்ததாரராக இருப்பதோடு, அத்தொகுதி பாஸ் கிளையின் பொருளாளராகவும் இருந்து வருகிறார்.

அதே நேரத்தில், தேசிய முன்னணி வேட்பாளராக தெங்கு ஜைஹான் செகு அப்துல் ரஹ்மான் (வயது 37) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோல பெசுட் தொகுதியைச் சேர்ந்தவரான இவர், வடிகாலமைப்பு மற்றும் நீர் பாசன துறையில் பொறியியலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை 9 மணி தொடங்கி, 10 மணி வரை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், கம்போங் ராஜா பெசுட்டில் உள்ள ராக்கான் மூடா வளாகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.