Home நாடு சபாவில் அடையாள அட்டைகளை மீண்டும் வழங்குவதால் கள்ளக்குடியேறிகள் பிரச்சனையை தீர்த்து விட முடியாது

சபாவில் அடையாள அட்டைகளை மீண்டும் வழங்குவதால் கள்ளக்குடியேறிகள் பிரச்சனையை தீர்த்து விட முடியாது

562
0
SHARE
Ad

images (3)சபா, ஜூலை 15 – சபா மக்களிடமிருந்து அடையாள அட்டைகளைத் திரும்பப் பெற்று, அதை மீண்டும் அவர்களுக்கு வழங்குவதால், கள்ளக்குடியேறிகள் பிரச்சனை தீர்ந்து விடாது என்று முன்னாள் சபா முதலமைச்சர் சோங் கா கியாட் கூறியுள்ளார்.

அரச விசாரணை ஆணையம் சபா மக்களிடமிருந்து அடையாள அட்டைகளைப் பெற்று அதை மீண்டும் அவர்களுக்கு வழங்கும் போது, கள்ளக்குடியேறிகளும் அந்த அட்டையைப் பெற்றுவிட மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“கள்ளக்குடியேறிகளின் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்றால் சபா மாநிலமே அதற்கான வழிகளைக் கையாள வேண்டும். அதை விடுத்து இப்பிரச்சனையை நாடாளுமன்றத்திற்கோ அல்லது மத்திய அரசாங்கத்திற்கோ கொண்டு செல்ல வேண்டாம்” என்றும் சோங் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், தனது பதவிக்காலத்திற்குப் பிறகு, சபாவில் கள்ளக்குடியேறிகள் குற்றச்செயல்களிலும், பல சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதாகவும் சோங் குறிப்பிட்டுள்ளார்.

சோங் கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து 2003 ஆம் ஆண்டு வரை சபா முதலமைச்சராகப்  பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.