Home கலை உலகம் தயாரிப்பாளர் ரவிசங்கர் பிரசாத் மறைவுக்கு அனுதாபம்: சினிமா படப்பிடிப்புகள் இன்று ரத்து

தயாரிப்பாளர் ரவிசங்கர் பிரசாத் மறைவுக்கு அனுதாபம்: சினிமா படப்பிடிப்புகள் இன்று ரத்து

535
0
SHARE
Ad

ஜூலை 15- ரவிசங்கர் பிரசாத் மறைவையொட்டி இன்று தமிழ் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

prasadசென்னையிலும், வெளியூர்களிலும் படப்பிடிப்புகள் நடக்கவில்லை. நடிகர், நடிகைகள் ஓட்டல்களிலேயே முடங்கினார்கள். ஸ்டுடியோக்கள் வெறிச்சோடி கிடந்தன.

ரவிசங்கர் பிரசாத் மறைவுக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதா ரவி, பொருளாளர் வாகை சந்திர சேகர் ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அதில் ரவிசங்கர் பிரசாத் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியானோம். அவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மற்ற மொழி படங்களையும் தயாரித்து திரையுலக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றினார். பழகுவதற்கு இனியவர்.

ரவிசங்கர் பிரசாத் மறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களை நடிகர் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டு உள்ளனர்.